Tuesday, March 25, 2008

ரோபோவில் நடிக்க ஐஸ் சம்பளம் ரூ.6 கோடி


ரஜினிக்கு ஜோடியாக ரோபோவில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்குகிறார் ஐஸ்வர்யா ராய்.
ஷங்கர் இயக்கத்தில் ரூ. 130 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் படம் ‘ரோபோ’. திரு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏப்ரலில் ஷ¨ட்டிங் தொடங்குகிறது.
இப்படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ‘ஜீன்ஸ்’ தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் மூலம் ஐஸ்வர்யா ராயிடம் பேசி 'ரோபோ'வுக்காக கால்ஷீட் பெறப்பட்டுள்ளது.
இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார் ஐஸ்வர்யா. ஹாலிவுட்டில் இவரது சம்பளம் ரூ. 4 கோடி. இப்போது இந்தியில் 'சர்க்கார் ராஜ்' படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் அவர் மீண்டும் நடிப்பதற்காக பேசப்பட்டு வந்தது.
அங்கு வாங்குவதைவிட அதிக சம்பளம் கிடைத்தால் மட்டுமே தமிழில் நடிக்கும் முடிவுடன் இருந்தார். இதையடுத்து 'ரோபோ'வுக்காக அவருக்கு பெரிய தொகை பேசப்பட்டுள்ளது. இந்திய நடிகைகளில் ஒரு படத்துக்கு ரூ. 6 கோடி சம்பளம் பெறும் முதல் நடிகை ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: